/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2025 09:32 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, லாரியில் கடத்தி வந்த தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி கொப்பம் எஸ்.ஐ., சிவசங்கரன் தலைமையிலான போலீசார், நேற்று காலை கொப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கேஎல் 51 க்யூ 3215 என்ற பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
லாரியில், 87 மூட்டைகளில், ஒரு டன் எடை கொண்ட தடை செய்த புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, லாரி டிரைவர் மண்ணார்க்காடு பள்ளிக்குன்னு பகுதியைச் சேர்ந்த அலிஅஷர், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பட்டாம்பி, கொப்பம், மலப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
புகையிலை பொருட்களை எங்கிருந்து, யார் அனுப்பினர் என, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.