தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

 கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

 கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : பிப் 14, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரியில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, உயர்கல்வி, பொறியியல், கலை மற்றும் அறிவியல் இளங்கலை மற்றும் முதுகலை கல்வி உதவித்தொகை பெறுபவர்களுக்கு, இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் ஒரு குடும்பத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மட்டும், ஆன்லைன் வாயிலாக, 40 வகையான தொழில் பிரிவுகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

குழந்தைகள், கல்லூரியில் படிக்கும் போதே, தங்களது திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, 15 கோடி ரூபாய் மதிப்பில், இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில், உயர்கல்வி உதவித்தொகை பெரும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது விண்ணப்பங்களை, '274 டி, ஸ்டேட் பேங்க் லேன், ஊட்டி' என்ற முகவரியில் இயங்கி வரும் நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது http://aplication tn bocw.com ; http:// registration tn bocw.com என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us