/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறை வழிபாடு மட்டுமே சமுதாயத்தை வழி நடத்தும்- சர்வ ஐஸ்வர்ய பூஜை நிகழ்ச்சியில் கருத்து

ADDED : ஜூன் 16, 2025 08:58 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு சிவன் கோவிலில் மாதந்தோறும், சர்வ ஐஸ்வர்ய பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு பூஜைகளுடன், துவங்கிய திருவிளக்கு பூஜைக்கு கோவில் தர்மகர்த்த சுந்தரம் தலைமை வகித்தார். பூஜைகளை தங்கமணி நடத்தி பேசுகையில், ''ஒவ்வொரு வீடுகளிலும் இறை வழிபாடு முக்கியமாகும். இன்றைய இளைய தலைமுறையினர் 'மொபைல் போன்' உலகில் மூழ்கி, தங்களின் வாழ்வை வேறு பாதையில் நடத்தி செல்லும் நிலை உள்ளது. இது வீட்டிற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கும் சீரழிவை ஏற்படுத்தும்.
அதனால் தான் குடும்பத்தில் செழிப்பு ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற சர்வ ஐஸ்வர்ய பூஜைகள் நடத்தப்படுகிறது. பூஜைகளின் போது உரிய மந்திரங்களை உச்சரித்து, செய்தால் அதற்குரிய முழுமையான பலன் கிடைக்கும்,'' என்றார். தொடர்ந்து, நடத்தப்பட்ட பூஜையில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் தலைவர் சதானந்தம், செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் அனீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.