/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பெர்ன்ஹில் கர்நாடக பூங்கா; சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
/
ஊட்டி பெர்ன்ஹில் கர்நாடக பூங்கா; சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
ஊட்டி பெர்ன்ஹில் கர்நாடக பூங்கா; சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
ஊட்டி பெர்ன்ஹில் கர்நாடக பூங்கா; சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
ADDED : ஜன 15, 2024 10:46 PM
ஊட்டி;ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள கர்நாடக பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா நகரமான ஊட்டியில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, ரோஜா பூங்கா மற்றும் பைகாரா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் கோடை சீசன் நாட்கள் உட்பட சாதாரண நாட்களில் கூட, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சமீபகாலமாக, தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள கர்நாடக பூங்காவின் அழகை கண்டுகளிக்க தவறுவதில்லை.
கர்நாடக தோட்டக்கலைத்துறை பராமரிப்பில், 100 ஏக்கர் பரப்பளவில் போதிய 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் இப்பூங்காவின் அழகை கண்டுகளித்து செல்கின்றனர்.
தற்போது, இங்குள்ள நர்சரியில் பல்வேறு வகையான வண்ண மலர் நாற்றுகள் பூத்து குலுங்குவது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, கர்நாடக, கேரளா, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதமான காலநிலையில், இயற்கை அழகை கண்டு, ரசித்து செல்கின்றனர்.