/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி தேதி மாற்றம்
/
ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி தேதி மாற்றம்
ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி தேதி மாற்றம்
ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி தேதி மாற்றம்
ADDED : மே 08, 2025 05:56 AM
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், ஆண்டுதோறும் கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மலர்கண்காட்சி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 127வது மலர்கண்காட்சி இம்மாதம், 16ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
இ-பாஸ் நடைமுறையால், வாகன கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் உள்ள, சுற்றுலா பயணியர் அனைவரும் மலர் கண்காட்சியை ரசிக்கும் வகையில், இம்மாதம், 15ம் தேதி துவங்கி, 25-ம் தேதி வரை, கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில், ''இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணியர் அனைவரும், மலர்கண்காட்சியை எவ்வித கெடுபிடியும் இல்லாமல் ரசிக்கும் வகையில், 10 நாட்கள் தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி நடக்கிறது. 12 மீ., நீளம் கொண்ட வாகனங்கள், நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெற்று வரும் சுற்றுலா பயணியர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சிலிண்டர் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது. அதுகுறித்து எச்சரிக்கை பலகைகள், மாவட்ட எல்லையில் வைக்கப்படுகிறது,'' என்றார்.