/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக ஊட்டி மத்திய காவல் நிலையம் தேர்வு

ADDED : செப் 08, 2025 09:29 PM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக, ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் செப்., 6 ம் தேதியை அடிப்படையாக வைத்து காவலர் நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல்அமைச்சர் கோப்பை வழங்கப்படும்.
இதன்படி, 2023-ம் ஆண்டுக்கான மாநிலம் முழுவதும் முதல்வர் கோப்பைகான, சிறந்த,46 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அதில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து, ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளது. பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமனிடம் இருந்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இதற்கான சான்றிதழை, ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் பெற்று கொண்டார்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் கூறுகையில், ''புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு புகாரை தீர்த்து வைத்தல்; கடந்த ஆண்டுகளை விட குற்ற சம்பவங்களை குறைத்தல்; வழக்குகளில் சிறந்த புலன் விசாரணை உட்பட பல்வேறு அம்சங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் இதைவிட சிறப்பாகவும் சரியாகவும் செயல்பட முயற்சிப்போம்,'' என்றார்.