/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய ஊட்டி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு

ADDED : நவ 13, 2024 06:23 AM

ஊட்டி, : ஊட்டி நகராட்சி கமிஷனர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த ஆக., மாதம் பொறுப்பேற்று கொண்டார். 'பொறுப்பேற்ற நாளிலிருந்து அனுமதி இல்லாத மற்றும் விதிமீறிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்,' உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி கொண்டு அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில மாதங்களாக, இவரை கண்காணித்து வந்தனர். கடந்த, 10ம் தேதி ஊட்டியில் இருந்து சொந்த ஊரான சென்னைக்கு வாடகை காரில் சென்ற போது, சிலரிடம் பணம் வாங்கி செல்வதாக, ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பில் காரை மடக்கி பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில், 11.70 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் பொறுப்பிலிருந்து அவரை தற்காலிகமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். ஊட்டி நகராட்சி பொறியாளருக்கு நகராட்சி கமிஷனர் பணி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டு உள்ளது.