/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிபுணர் குழு அமைத்து கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம் ஊட்டி கோர்ட் உத்தரவு

ADDED : பிப் 24, 2024 01:55 AM

ஊட்டி;'நிபுணர் குழு அமைத்து கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம்,' என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று, நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் கனகராஜ் மற்றும் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோர்ட்டில் ஆஜராகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ், சயான் ஆகியோர் ஆஜராகினர்.
அரசு வக்கீல் கனகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''கோடநாடு பங்களாவை கோர்ட் மூலம் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனை இல்லை. சி.பி.சி.ஐ.டி., போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு கோடநாடு பங்களாவை, கொலை நடந்த பகுதிகளை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதனை ஏற்று கொண்ட நீதிபதி, நிபுணர் குழு அமைத்து கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம்; அதனை முழுவதுமாக 'வீடியோ' எடுத்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். சாட்சியங்களை அழிக்க கூடாது என்று உத்தரவிட்டார். பின் வழக்கு விசாரணையை மார்ச், 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்,'' என்றார்.