/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மாவட்டத்தில் 'கார்ப்பரேட்' நிறுவன வாகனங்களை கண்காணிக்க தனி குழு ஊட்டி வாகன ஓட்டுனர் சங்கத்தினர் வலியுறுத்தல்

ADDED : ஜன 07, 2025 01:55 AM

ஊட்டி; 'நீலகிரிக்கு வரும் 'கார்ப்பரேட்' நிறுவன வாகனங்களை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும்,' என, ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், கலெக்டர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அதன் பின், அதிகாரிகள்; போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி,'இந்த பிரச்னைக்கு சில நாட்களில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்,' என, உறுதி அளித்தனர்.
தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு:
கோவை உட்பட பிற பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வரும், 'கார்ப்பரேட்' நிறுவனங்களின் சுற்றுலா வாகனங்கள் இங்கு அதிகளவில் வருவதால், உள்ளூரில் இயக்கப்படும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள்; டிரைவர்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது.
இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. மேலும், அத்தகைய வாகனங்கள், ஊட்டி வருவது மட்டுமல்லாமல், உள்ளூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கும் செல்வதால், சீசன் காலங்களிலும் உள்ளூர் வாகன இயக்கம் இல்லாத சூழல் ஏற்படுகிறது.
இதனால், வெளி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பயணிகளை 'டிராப்' மட்டும் செய்து சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும்; இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு கார்ப்பரேட் நிறுவன வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது; நீலகிரி மாவட்டத்தில் இருந்து எந்த சுற்றுலா பயணிகளையும் ஏற்றி செல்லக்கூடாது; அவசர காரணங்களுக்காக மட்டும் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்; இதை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும்; மலை மாவட்டத்தில் அனுபவம் இல்லாமல் ஒரு வழி பாதையில் இயங்கும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.