/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.401; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
/
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.401; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.401; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.401; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
ADDED : ஆக 04, 2025 07:52 PM

குன்னுார்; ஊட்டி பூண்டு கிலோ, 220 முதல் 401 ரூபாய் வரை விற்பனையாகிறது.
நீலகிரி மாவட்டத்தில், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உட்பட மலை காய்கறிகள் விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அதில், ஊட்டி, குன்னுார், குந்தா உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பூண்டு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு விளைவிக்கும் பூண்டு மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், வாரந்தோறும் ஞாயிறன்று ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் குறைந்த பட்சமாக கிலோவுக்கு, 220 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 401 ரூபாய் வரை ஏலம் போனது.
கடந்த ஆண்டில் கிலோவிற்கு, 1,000 ரூபாய் வரை உயர்ந்த பூண்டு விலை, தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த, 3 வாரங்களாக ஊட்டி பூண்டு விலை ஏற்றம் கண்டு வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஊட்டி, குன்னுார் உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் பூண்டு விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வட மாநில விவசாயிகள், விதைக்காக, ஊட்டி பூண்டு வாங்க அதிகளவில் வருகை தருவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

