/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.60! வரத்து அதிகரிப்பு; விலை வீழ்ச்சி
/
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.60! வரத்து அதிகரிப்பு; விலை வீழ்ச்சி
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.60! வரத்து அதிகரிப்பு; விலை வீழ்ச்சி
ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ.60! வரத்து அதிகரிப்பு; விலை வீழ்ச்சி
ADDED : மார் 18, 2025 09:41 PM

குன்னுார்; ஊட்டி பூண்டு விலை கிலோவிற்கு, 60 ரூபாய் வரை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், கேரட், உருளைகிழங்கு போன்ற மலை காய்கறிகளுக்கு அடுத்தபடியாக, ஊட்டி பூண்டு அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஊட்டி பூண்டு தரமாக உள்ளதால், தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில், அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு பிறகு, ஊட்டி பூண்டு விலை அதிகரித்ததால், பூண்டு சாகுபடியில் பலர் ஆர்வம் காட்டினர். கடந்த சில மாதங்களுக்கு, 600 ரூபாய் வரை விற்பனையானது. சில தரமான ரகம், 1000 ரூபாய் விலை வைத்து விற்பனையானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த மேட்டுப்பாளையம் ஏலத்தில், குறைந்தபட்சம் கிலோவிற்கு, 60 ரூபாய் முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை ஏலம் போனது.
தற்போது, தொடர்விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் மத்தியில் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,'ஒரே நேரத்தில் அதிகளவில் பயிரிடுவதாலும், அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு, ஏல மண்டிகளுக்கு கொண்டு செல்வதால் வரத்து அதிகரித்து விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா மாநிலம், சீனாவில் இருந்து வரும் பூண்டு காரணமாகவும் இந்த வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது,' என்றனர்.