/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏலத்தில் ஏற்றம் காணும் ஊட்டி பூண்டு விலை
/
ஏலத்தில் ஏற்றம் காணும் ஊட்டி பூண்டு விலை
ADDED : ஜூலை 27, 2025 09:31 PM
குன்னுார்; கடந்த, 5 மாதங்களாக வீழ்ச்சி ஏற்பட்டு வந்த, ஊட்டி பூண்டு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 1,500 ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கும் ஊட்டி பூண்டு, மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், வாரந்தோறும் ஞாயிறு அன்று ஏலம் விடப்படுகிறது.
கடந்த ஆண்டு உச்சத்தை தொட்ட பூண்டு விலை, மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து விலை சரிவு ஏற்பட்டு வந்தது. இதனால், விவசாயிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக ஊட்டி பூண்டு விலை ஏற்றம் கண்டு வருகிறது.
நேற்று நடந்த ஏலத்தில், கிலோவுக்கு, 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஏலம் போனது.
விவசாயிகள் கூறுகையில்,'கடந்த ஐந்து மாதங்களாக உத்திர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு விளைச்சல் காரணமாக, ஊட்டி பூண்டு வாங்குவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது, வட மாநில விவசாயிகள், விதைக்காக ஊட்டி பூண்டு அதிகம் வாங்குவதால், கிராக்கி ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டு வருகிறது,' என்றனர்.