/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது
/
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது
ADDED : அக் 18, 2024 07:39 AM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே, மலை ரயில் தினசரி, காலை, 7:10 இயக்கப்படுகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே, மலை பகுதிகளில் கனமழை பெய்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, ரயில்வே நிர்வாகம், 16, 17 ஆகிய இரண்டு தேதிகளில், மலை ரயிலை ரத்து செய்திருந்தது. மழை நின்றதை அடுத்து, இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது.
காலை, 7:10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. இதில்,150 சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.