/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் ஊட்டி மலை ரயில் ரத்து
/
தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் ஊட்டி மலை ரயில் ரத்து
தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் ஊட்டி மலை ரயில் ரத்து
தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் ஊட்டி மலை ரயில் ரத்து
ADDED : மே 10, 2025 01:16 AM

குன்னுார் : குன்னுார்- மேட்டுப்பாளையம், இடையே ரயில் பாதையில், பாறைகள் விழுந்ததால் மலைரயில் ரத்து செய்யப்பட்டது.
குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, அவ்வப்போது மழை பெய்தது.
கடந்த, 2 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த போதும், நேற்று அதிகாலையில், மேட்டுப்பாளையம் -குன்னுார் இடையே, ஹில் குரோவ், 17வது கி.மீ., அருகே மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தது.
இதனால், காலை, 7:10 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் மற்றும் காலை, 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் பாறைகள் அகற்றி தண்டவாள சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதே சமயம், குன்னுார் ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள், பாதிப்பின்றி பயணம் மேற்கொண்டனர்.