/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீல் ராடு உடைந்ததால் ஊட்டி மலை ரயில் தாமதம்
/
வீல் ராடு உடைந்ததால் ஊட்டி மலை ரயில் தாமதம்
ADDED : ஜூலை 10, 2025 10:07 AM

குன்னுார்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம், குன்னுார் வழியாக, ஊட்டிக்கு நாள்தோறும் ஒரு முறை மட்டும் இயக்கப்படும் மலை ரயில் காலை, 7:10 மணிக்கு புறப்பட்டு, குன்னுாருக்கு காலை, 10:10 மணிக்கு வந்து சேருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து, 200 சுற்றுலா பயணியருடன் புறப்பட்ட மலை ரயில், கல்லார் அருகே, 6வது கி.மீ., பகுதியில் திடீரென, இன்ஜின் 'வீல் ராடு' உடைந்து நின்றது.  தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, மாற்று இன்ஜினில் மலை ரயிலை இணைத்து, 9:30 மணிக்கு புறப்பட்டது.
இரண்டு மணிநேரம் தாமதமாக, பகல், 12:15 மணிக்கு குன்னுார் வந்த மலை ரயில், ஊட்டிக்கு மதியம், 1:30 மணிக்கு சென்று சேர்ந்தது. இதனால், சுற்றுலா பயணியர் சோர்வடைந்தனர்.

