/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலை ரயில் பயணம் :வெளிநாட்டினர் குதுாகலம்
/
ஊட்டி மலை ரயில் பயணம் :வெளிநாட்டினர் குதுாகலம்
ADDED : நவ 09, 2025 10:11 PM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில்,2வது சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின் றனர். ஊட்டியில் இருந்து குன்னுார் வந்த மலை ரயிலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா என பல நாடுகளில் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள், நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையம் மற்றும் 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின் முன்பு நின்று போட்டோ எடுத்தனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹெவ்லின் கூறுகையில், ''கடந்த, 1968ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த போது, நீலகிரிக்கு வர முடியவில்லை. தற்போது, சகோதரர் மற்றும் நண்பர்களுடன் நீலகிரிக்கு வந்து மலை ரயிலில் பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பாலங்கள், குகைகளுக்குள் வந்த மலை ரயில் பயணத்தில் பசுமை சூழ்ந்த மரங்கள், தேயிலை தோட்டங்கள் என இயற்கை காட்சி அருமை. குன்னுார் ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ள வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பெயின்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது, இதமான காலநிலையும், இயற்கையின் அழகையும் கொண்ட நீலகிரி அமைதியின் இடமாக திகழ்கிறது,'' என்றார்.

