'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊட்டி மேம்படுத்தப்படும்'
'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊட்டி மேம்படுத்தப்படும்'
UPDATED : ஜூன் 11, 2026 05:48 PM
ADDED : ஜூன் 11, 2026 05:41 PM
ஊட்டி: 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியுடன் ஊட்டியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., புதிய அலுவலகத்தை, பா.ஜ., தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி திறந்து வைத்தார். வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., போஜராஜன் தலைமை வகித்து பேசுகையில்,''இந்த அலுவலகம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் மையமாக செயல்படும். தொகுதி மக்கள் நேரடியாக வந்து பிரச்னைகளை தெரிவிக்கலாம். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியுடன் ஊட்டியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
