/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் திறந்தவெளி கால்வாய்; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
/
சாலையோரம் திறந்தவெளி கால்வாய்; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
சாலையோரம் திறந்தவெளி கால்வாய்; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
சாலையோரம் திறந்தவெளி கால்வாய்; வாகன விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூலை 14, 2025 08:47 PM

கூடலுார்; தமிழக -கேரளா எல்லையான நாடுகாணியில், சாலையோரம் உள்ள திறந்த வெளி கால்வாயில் வாகனங்கள் விழுந்து விபத்தில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக -கேரளா எல்லையான நாடுகாணியிலிருந்து, கூடலுார், பந்தலுார் மற்றும் கேரளா நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை உள்ளூர் வாகன போக்குவரத்துக்கு மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு -மலப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலை வழித்தடமாகவும் உள்ளது.
நாடுகாணியில் கழிவுநீர் வழிந்தோட, நிலம்பூர் -கூடலுார் சாலையோரம் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் அமைத்துள்ளனர். இதன் ஒரு பகுதி, சேதமடைந்து சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியாக பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இவ்வழியாக நடந்து செல்பவர்களும் தடுமாறி விழும் நிலை தொடர்கிறது. எனவே, இப்பகுதியை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.