திறந்த வெளியில் தேங்கும் கழிவு நீர்: சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
திறந்த வெளியில் தேங்கும் கழிவு நீர்: சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
UPDATED : மே 11, 2026 07:27 PM
ADDED : மே 11, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழுவி நீர், திறந்தவெளியில் தேங்கி, சாலை வழியாக வெளியேறுவதால் சுகாதாரம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தின் பின்புறத்தில், உழவர் சந்தையை ஒட்டி அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. மைசூரு தேசிய நெடுஞ்சாலை இருந்து, நகராட்சி ஊழியர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையை, அம்மா உணவகத்துக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அதன் நுழைவு வாயில் அருகே, சாலையில் திறந்தவெளி குட்டை போல தேங்கி வெளியேறி வருகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கழிவுநீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
