ADDED : மார் 10, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:சூலுார் பேரூராட்சி பொது நிதி மற்றும் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் மதியழகன் நகர் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடந்து வந்தது.
மொத்தம், 70 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட இந்த சமுதாய நலக்கூடத்தை, எம்.பி., நடராஜன் நேற்று திறந்து வைத்தார். பேரூராட்சி தேவி, துணைத்தலைவர் கணேஷ், செயல் அலுவலர் சதீஷ்குமார், தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மன்னவன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, வடிகால் கட்டுதல், தடுப்பு சுவர், சுற்றுசுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை எம்.பி., துவக்கி வைத்தார்.

