sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மஞ்சூர் அப்பர் பவானி அணையை திறந்து... தண்ணீர் வினியோகம்!சமவெளி தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

/

மஞ்சூர் அப்பர் பவானி அணையை திறந்து... தண்ணீர் வினியோகம்!சமவெளி தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

மஞ்சூர் அப்பர் பவானி அணையை திறந்து... தண்ணீர் வினியோகம்!சமவெளி தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

மஞ்சூர் அப்பர் பவானி அணையை திறந்து... தண்ணீர் வினியோகம்!சமவெளி தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை


ADDED : மே 02, 2024 11:40 PM

Google News

ADDED : மே 02, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:சமவெளி மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில், அப்பர்பவானி அணையிலிருந்து பில்லுார் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

நீலகிரியில், 'முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார்,' ஆகிய, 13 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

அதில், குந்தா வட்டத்தில், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி, காட்டுக் குப்பை,' என, 6 மின்நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில், 'முக்கூர்த்தி நுண் புனல் மின் நிலையம், பைக்காரா நுண்புனல் மின்நிலையம், சிங்காரா மின்நிலையம், மாயார், மரவகண்டி நுண் புனல் நிலையம், பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம்,' என, 6 மின் நிலையங்கள் உள்ளன. மொத்தம், 12 மின்நிலையங்கள் மூலம் தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

மழை வராததால் பாதிப்பு


கடந்தாண்டில் பருவ மழை பொய்த்தது. இதனால், அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைகள் தண்ணீரின்றி வறண்டது. பிற அணைகளின் நீர்மட்டம் சரிந்து குட்டைபோல் காட்சியளிக்கிறது.

காட்டுகுப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், முக்கூர்த்தி நுண் புனல் மின் நிலையம், ஆகிய மின்நிலையங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்நிலையங்கள் மூலம், தினசரி, 200 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிநீர் வினியோகம்


நீலகிரியில் உள்ள அணைகளை நம்பி, மின் உற்பத்தி மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்திற்கு பில்லுார் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும், மலை மாவட்ட மின்வாரியம் குடியிருப்பு மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு, எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், மழையில்லாமல் அணைகள் வறண்டதால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கான குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் கோவை மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பர்பவானி சென்று அணையின் தண்ணீர் இருப்பை பார்வையிட்டு சென்றனர்.

இந்நலையில், நேற்று முன்தினம் முதல், அப்பர்பவானி அணையில் இருந்து தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திறந்து விடப்பட்டு, அத்திக்கடவு வழியாக பில்லுார் அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து, கோவை மாவட்டம் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. மழை வந்தால் மட்டுமே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us