/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயணிகளுக்கு புதிய நிழற்குடை திறப்பு
/
பயணிகளுக்கு புதிய நிழற்குடை திறப்பு
ADDED : நவ 14, 2024 09:06 PM

குன்னுார்; குன்னுார் பெட்போர்டு பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது.
குன்னுார் பெட்போர்டு பகுதியில், பந்துமை, சிம்ஸ்பார்க், பேரக்ஸ் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இங்கு நிழற்குடை இல்லாததால், பயணிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில், 'குன்னுார் ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா -117' அமைப்பின், 'லேடீஸ் சர்க்கில் கிளப்--74' சார்பில், தனியார் நிதியுதவியுடன், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது. அரசு கொறடா ராமச்சந்திரன் இதனை திறந்து வைத்தார். விழாவில், அமைப்பின் குன்னுார் தலைவர் சபரீஷ் தேவராஜ், செயலாளர் நிஷாந்த், பொருளாளர் வினீத் முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை, லேடீஸ் சர்க்கில் கிளப் தலைவர் பிரியங்கா, செயலாளர் அபர்ணா, பொருளாளர் முஸ்கான் கண்ணா உட்பட பலர் செய்திருந்தனர்.