/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலுவை மனு பதிவேற்றம் செய்ய மீண்டும் வாய்ப்பு: சிறப்பு உதவி மையம் திறப்பு

ADDED : பிப் 22, 2024 11:42 PM
ஊட்டி:'நிலுவை மனுக்களை மீண்டும் சிறப்பு உதவி மையத்தில் உரிய ஆவணங்களை அளித்து பதி வேற்றம் செய்து கொள்ளலாம்,' என, தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் உதவி கமிஷனர் லெனின் அறிக்கை: இணையத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப பழுது காரணமாக நிலுவையில் உள்ள தொழிலாளர் நல வாரிய பதிவு விண்ணப்ப விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொடர்பான, 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மனுக்கள் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும் www.tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணைய தளம் வாயிலாக பெறப்படுகிறது.
இந்த இணையத்தின் சேமிப்பு மையம் செயல்படாததால் ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்யும் வகையில் சிறப்பு உதவி மையம், தொழிலாளர் உதவி கமிஷனர், சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த, டிச.,2023ம் ஆண்டு, 2ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களை மீண்டும் சிறப்பு உதவி மையத்தில் உரிய ஆவணங்களை அளித்து பதி வேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.