/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை திறப்பு
/
மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை திறப்பு
ADDED : ஜூன் 27, 2025 09:06 PM
பந்தலுார்; பந்தலுாரில் இருந்து குந்தலாடி வழியாக கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தேவர்சோலை, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதில், குந்தலாடி பூதாலக்குன்னு கிராமத்தின் அருகே நிழற்குடை அமைத்து தர, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை மனு அளித்தனர்.
அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் மக்கள் மற்றும் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வாகனங்களுக்கு காத்திருக்கும் சூழல் தொடர்ந்தது.
இந்நிலையில், குந்தலாடி பகுதியில் செயல்பட்டு வரும், 'ஒன்வே ஸ்டார்' ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகளிடம் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நிழற்குடை அமைத்தனர். இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர்வரவேற்றார். ஆசிரியர் சஜி திறந்து வைத்தார். கிளப் முன்னாள் தலைவர் மணிகண்டன், செயலாளர் சிமியோன்,பொருளாளர் சிவா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலாளர் கமல்நாதன் நன்றி கூறினார்.

