/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இரு புதிய பஸ்கள் இயக்கம் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்பாடு
/
ஊட்டியில் இரு புதிய பஸ்கள் இயக்கம் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்பாடு
ஊட்டியில் இரு புதிய பஸ்கள் இயக்கம் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்பாடு
ஊட்டியில் இரு புதிய பஸ்கள் இயக்கம் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்பாடு
ADDED : மார் 10, 2024 11:28 PM

ஊட்டி:ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு, இரண்டு புதிய சுற்று பஸ்கள் இயக்கம் துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் கோடை சீசன் நாட்களில் சுற்றுலா பயணிகள் எழில் நிறைந்த சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் குறைந்த கட்டணத்தில் கண்டுக்களிக்க சுற்று பஸ்கள் இயக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் சுற்று பஸ்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நடப்பாண்டு, ஊட்டியில் ஏப்., மே மாதம் கோடை சீசன் துவங்குகிறது. சுற்றுலா பயணிகள் தேவைக்கு ஏற்ப, தற்போது இரண்டு புதிய சுற்று பஸ்களின் இயக்கத்தை, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
இந்த சுற்று பஸ்கள் ஊட்டி மத்திய நிலையத்தில் இருந்து புறப்பட்டு, படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
பெரியவர்களுக்கு, 100 ரூபாய்; சிறுவர்களுக்கு, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல, பெண்களுக்காக ஊட்டியில் இருந்து, லவ்டேல், கெராடா, சாந்துார், எல்லநள்ளி வழியாக, குன்னுாருக்கு புதிய வழித்தடத்தில் பஸ்சும் இயக்கப்படுகிறது. மேலும், சேமந்தாடா கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க, கொல்லிமலை வரை பஸ் இயக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் அருணா மற்றும் போக்குவரத்து கழக பொதுமேலாளர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

