/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகை பெற வாய்ப்பு
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகை பெற வாய்ப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகை பெற வாய்ப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகை பெற வாய்ப்பு
ADDED : மார் 21, 2025 10:02 PM
ஊட்டி; 'முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், வைப்பு தொகை பத்திரம் பெற்றவர்கள் முதிர்வு தொகை பெறலாம்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, வைப்பு தொகை பத்திரம் பெற்றவர்களில், 19 வயது கடந்தும் முதிர்வு தொகை கோராத, 122 பயனாளிகளின் பெயர் பட்டியல், நீலகிரி மாவட்ட இணையத்தளமான Nilgiris.nic.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதன்பின், வைப்பு தொகை பத்திர நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன், ஊட்டி பிங்கர் டோஸ்ட், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.