தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

 தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

 தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு


ADDED : ஏப் 16, 2026 06:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு வரும், 23ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை:

வரும் சட்டசபை தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஓட்டளிக்க, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

தேர்தல் நாளில் ஓட்டளிப்பது அவசியம் என தொழிலாளர்களுக்கு நிறுவன உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத புகார்களை குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக அதிகாரிகளுக்கு, 8111009568, 7695957789 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us