தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவு

 சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவு

 சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவு


ADDED : ஜன 24, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பகுதி போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தனியார் பஸ்கள், கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், பொதுமக்களின் செயல்பாடுகள் மற்றும் சமூகவிரோத செயல்களை கண்காணிக்கும் வகையில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக அரசு அலுவலகங்களில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள், போலீஸ் நிலையங்களுக்கு வரும் நபர்களின் செயல்பாடுகள் குறித்து, கண்காணிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், கடந்த, 19ம் தேதி தேவாலா மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்ய முயன்ற போது கேமராக்கள் பழுதடைந்து இருந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து கேமராக்கள் பழுது நீக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வரும் நிலையில், பிற போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசுத்துறை அலுவலகங்களில், செயல்படும் சி.சி.டி.வி. கேமராக்களின், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து, ஒவ்வொரு அரசு துறை அலுவலகங்களிலும், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us