/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுகர்வோருக்கு எடையளவு தெரியும்படி வைக்க உத்தரவு
/
நுகர்வோருக்கு எடையளவு தெரியும்படி வைக்க உத்தரவு
ADDED : ஜன 01, 2026 06:04 AM
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர்.
அதன்பின், தலைமை வகித்த தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் முகமது யூசுப் பேசிய தாவது:
மாவட்டத்தில், வார சந்தைகளில் கூட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும். பேக்கரிகளில் இனிப்பு பலகாரங்களை அட்டை பெட்டியுடன் சேர்ந்து, நிகர எடையில் வழங்க கூடாது.
பால் விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் கடைகளில் பால் பாக்கெட்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.
அனைத்து பொட்டல பொருட்களிலும் விதிகளின்படி குறிப்பிட வேண்டிய விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்யக்கூடாது. பொட்டல பொருட்களின் எடையை நுகர்வோர் சரிபார்க்கும் வகையில், எடை கருவிகள் வைக்க வேண்டும்.
பொருட்களை எடை இடும்போது தராசுகளை நுகர்வோர் பார்வையில் படும்விதமாக வைப்பது அவசியம். அனைத்து வகையான எடை கருவிகளும், முறைப்படி முத்திரை இடப்பட்டு பயன்படுத்த வேண்டும்.
இந்த சட்ட விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது, சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முகமது யூசுப் பேசினார்.
கூட்டத்தில் தொழிலாளர்கள் துணை ஆய்வாளர் கதிரவன், முத்திரை ஆய்வாளர் ஜவகர் கணேஷ் உட்பட பலர் பங் கேற்றனர்.

