/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளில் திருக்குறள் எழுத உத்தரவு
/
கடைகளில் திருக்குறள் எழுத உத்தரவு
ADDED : மே 13, 2025 10:59 PM
குன்னுார்; நீலகிரி மாவட்ட தொழிலாளர்கள் நல உதவி ஆணையர் அமலாக்கம் தாமரை மணவாளன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஆண்டு டிச., 31ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில், 'தனியார் நிறுவனங்களில் திருக்குறளும், உரையும் எழுதுவது' குறித்து மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திருவள்ளுவரின் திருக்குறளை, தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில், பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெற, காட்சிப்படுத்திட வேண்டும்.
அனைத்து தனியார் நிறுவனங்களில், திருக்குறளும், விளக்க உரையும் எழுதுவதை ஊக்குவிக்க, தொழில் நல்லுறவு பரிசுக்கு தேர்வு செய்யப்படும். இதன் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் போது, சிறப்பு மதிப்பெண்கள் இனி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.