/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அங்கக வேளாண் பயிற்சி முகாம்: விவசாயிகளுக்கு இடு பொருட்கள்
/
அங்கக வேளாண் பயிற்சி முகாம்: விவசாயிகளுக்கு இடு பொருட்கள்
அங்கக வேளாண் பயிற்சி முகாம்: விவசாயிகளுக்கு இடு பொருட்கள்
அங்கக வேளாண் பயிற்சி முகாம்: விவசாயிகளுக்கு இடு பொருட்கள்
ADDED : ஏப் 02, 2025 09:55 PM
கோத்தகிரி:
கோத்தகிரி நெடுகுளா கிராமத்தில், தோட்டக்கலை -மலை பயிர்கள் துறை சார்பில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார்.
ஊட்டி மண் ஆய்வு கூட உதவி இயக்குனர் அனிதா, 'அங்கக வேளாண்மையில் மண்வளத்தின் பங்கு மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முறைகள்,' குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி மாணிக்கவாசகம், 'வேளாண் காடுகள்; அதனை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
முத்தோரை மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் விஞ்ஞானி பிரியாங் மாத்ரே, 'அங்கக முறையில் உருளை கிழங்கு சாகுபடி செய்வது குறித்தும், அதன் பயன்கள்,' குறித்தும் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார்.
வேளாண் தர கட்டுப்பாட்டு துறை வேளாண்மை அலுவலர் அமிர்தலிங்கம், ' விவசாயத்தில் நேரடி உரங்களின் பயன்பாடு, உரம் மற்றும் வேளாண் மருந்துகளின் தரங்கள், அதனை விவசாயிகள் வாங்கும் முறை,' குறித்து விளக்கினார்.
கால்நடைத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் கால்நடை மருத்துவர் பவித்ரா ஆகியோர், 'கால்நடை துறை மூலம் செயல் படுத்தப்படும் மானிய திட்டங்கள்,' குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, அங்கக இடு பொருட்கள் வழங்கப்பட்டன. வேளாண் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தோட்டக்கலை அலுவலர் கவின் பிரசாத் நன்றி கூறினார்.

