
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா ஹட்டி பகுதி விவசாயிகளுக்கு, 'ஆல் தி சில்ட்ரன்' அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி மற்றும் காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்து, இயற்கை விவசாயம் செய்வதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதில், விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று கள பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.