/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 'ஆர்கானிக்' விவசாயம் அவசியம்
/
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 'ஆர்கானிக்' விவசாயம் அவசியம்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 'ஆர்கானிக்' விவசாயம் அவசியம்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 'ஆர்கானிக்' விவசாயம் அவசியம்
ADDED : ஜூன் 30, 2025 10:02 PM

குன்னுார்; நீலகிரி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பாரம்பரிய இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ், குன்னுார் 'உபாசி' அரங்கில், காலநிலை மாற்றங்களால், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கு மற்றும் வேளாண் வர்த்தக கண்காட்சி நடந்தது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை வகித்தார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி பேசுகையில்,''தற்போது நிலவும் கால நிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களால் ஆர்கானிக் வேளாண்மையை மேற்கொள்ள விவசாயிகள் முன் வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
ஊட்டி வேளாண் அறிவியல் நிலைய முனைவர் ராஜா பேசுகையில்,''உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, தற்போது உணவே நஞ்சாக மாறிவிட்டது. ஆர்கானிக் வேளாண்மையில், சாகுபடிக்கு ஏற்ற சிறந்த தொழில்நுட்பங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
மண் மற்றும் நீர் மேலாண்மை முனைவர் சுந்தராம்பாள், சுற்றுச்சூழல் துறை அலுவலர் பூஜா, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி முனைவர் ராஜேந்திரன், முன்னோடி விவசாயி தேவ் ஆகியோர், ஆர்கானிக் வேளாண்மை மற்றும் மூலிகை தாவரங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
வேளாண் கண்காட்சியில் தாம்பட்டி, கோவை, காசோலை, பழத்தோட்டம், கேத்தி, காந்தி பேட்டை பகுதிகளை சேர்ந்த அங்கக விவசாயிகள் மற்றும் ஆர்கானிக் நிறுவனங்களை சேர்ந்தவர்களின் விளை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதி தோட்டக்கலை அங்கக சங்கத்தை சார்ந்த விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட, 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.