UPDATED : ஜூன் 14, 2026 03:38 PM
ADDED : ஜூன் 14, 2026 03:30 PM
கோத்தகிரி:கோத்தகிரி வட்டார தோட்டக்கலை - மலை பயிர்கள் துறை சார்பில், தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், கோத்தகிரி, கூக்கல், தீனட்டி பகுதியை சேர்ந்த, 40 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வளாகத்தில் நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியில், பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் தவமணி, இயற்கை வேளாண்மையில் மண் வளம் மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள், பூச்சி நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
மேலும், பூச்சி நோய் மேலாண்மைக்காக சரியான பயிர் ரகங்களை தேர்வு செய்வது, இயற்கை இடுபொருட்களின் அத்தியாவசிய குறித்தும் விளக்கினார்.
சுற்றுச்சூழல் துறை இளநிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ்குமார், இயற்கை கழிவுகளை மக்க வைத்து உரமாக்குவது, மண்புழு உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
