/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா
/
இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா
ADDED : அக் 23, 2024 09:58 PM

ஊட்டி: நூற்றாண்டு பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா நடந்து வருகிறது.
ஆண்டுதோறும் அக்., மாதத்தில், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஜெபமாலை அன்னையின் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் உள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பங்கு தந்தை ரவி லாரன்ஸ் தலைமையில், ஜெபமாலை வைத்து ஜெபித்து வழிபாடு நடந்து வருகிறது.
ஊட்டியில் உள்ள, 32 குழுவினர் மாலை நேரங்களில் தினந்தோறும் சென்று இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பொதுவான இடத்தில், ஜெபமலை அன்னை சொரூபத்தை எடுத்து சென்று அங்கு ஜெபமாலை வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம்மாதம், 27ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவாலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.