ADDED : ஜன 25, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் திருச்சி ரோட்டில், சென்டர் மீடியன் மீது மோதிய லாரி கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூலுார் பிரிவில் இருந்து, தனியார் பார்சல் சர்வீஸ் லாரி நேற்று காலை பல்லடம் நோக்கி சென்றது. டிரைவர் பிரகாஷ், 40. லாரியை ஓட்டினார்.
சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் அருகே சென்ற போது, முந்தி சென்ற காரின் மீது மோதாமல் இருக்க, லாரி டிரைவர் பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியன் மீது மோதி, ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அதிஷ்டவசமாக, டிரைவர் காயமின்றி தப்பினர். ரோட்டின் குறுக்கே லாரி கவிழந்ததால் திருச்சி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.