/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படைச்சேரி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி
/
படைச்சேரி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி
படைச்சேரி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி
படைச்சேரி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி
ADDED : மார் 15, 2024 11:05 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் படைச்சேரி கிராமம் அமைந்துள்ளது.
தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சாலை, நடைபாதை, குடிநீர் வசதிகள் செய்து தர வலியுறுத்தி வந்தனர். கிராமத்தின் சில பகுதிகளுக்கு செல்ல ஒற்றையடி மண் நடைபாதை மட்டுமே உள்ளதால், நடந்து செல்ல முடியாத நிலை தொடர்கிறது. யாரேனும் உயிரிழந்தால், உடலை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
சாலையில் கற்கள் பெயர்ந்து காணப்படுவதால்,அவசர தேவைகளுக்கு வாகனங்கள் வந்து செல்ல முடிவதில்லை. சீரமைத்து தர அதிகாரிகள் முன்வராத நிலையில், நொந்து போன கிராம மக்கள், 'வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டு கேட்டு அதிகாரிகள் கிராமத்திற்கு வரக்கூடாது; விரைவில் போராட்டம் நடத்தப்படும்,' என, தெரிவித்து, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திரபோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், கிராமத்தில் நேரடி ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை ஏற்பட்டு உறுதி அளித்துள்ளதால், இதனால், மக்கள் நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

