ADDED : ஏப் 02, 2026 07:03 PM
ஊட்டி: நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜகுமார் அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்களில் புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதில், ஓட்டுரிமை உள்ள தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளான இம்மாதம், 9ம் தேதி அன்று ஓட்டளிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தேர்தல் நாளன்று ஓட்டளிப்பது அவசியம் என்று தொழிலாளர்களுக்கு மேற்படி நிறுவனங்களின் உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
தவிர, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து குன்னுாரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர், 8111009568, 7695957787 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
