தகுதி வாய்ந்த வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
தகுதி வாய்ந்த வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
ADDED : ஏப் 03, 2026 03:28 PM
ஊட்டி: 'தேர்தல் நாளில் தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களுக்கும், ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்,' என, தெரிவித்தப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாவட்டத்தில் வரும், 23ல் சட்டசபை பொதுத் தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் சுதந்திரமாக ஓட்டளிப்பதற்கு ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு ஓட்டளிக்கும் நாளான, 23ல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயம்.
மேலும், தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒரு பணியாளரின் ஓட்டு, வேறு சட்டசபை தொகுதியில் இருந்தாலும் அவர் ஓட்டளிப்பதற்கு செல்ல தேவையான விடுமுறை வழங்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை அனைத்து நிறுவனங்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
