/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிழற்குடையில் ஓவியம் குழந்தைகள் குதுாகலம்
/
நிழற்குடையில் ஓவியம் குழந்தைகள் குதுாகலம்
ADDED : அக் 14, 2025 01:35 AM

குன்னுார்:குன்னுார் அந்தோணியார் பள்ளி அருகே உள்ள நிழற்குடையில், குழந்தைகளை கவரும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
குன்னுாரில் உள்ள தன்னார்வ அமைப்புகள், 'உற்சவ்' என்ற பெயரில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் அந்தோணியார் பள்ளி அருகே நிழற்குடை மற்றும் தடுப்பு சுவரில் குழந்தைகளை கவரும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
மரங்கள் வெட்டப்படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த ஓவியங்களில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், 'பிளாஸ்டிக் ஒழிப்பு, மரங்கள் வெட்டகூடாது, வன விலங்குகள்' உள்ளிட்டவை குழந்தைகளை கவரும் வகையில் ஓவியமாக தன்னார்வ அமைப்பில் உள்ளவர்கள் வரைந்தனர். இந்த ஓவியங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.