தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குருத்தோலை ஞாயிறு கிறிஸ்துவர்கள் ஊர்வலம்

 குருத்தோலை ஞாயிறு கிறிஸ்துவர்கள் ஊர்வலம்

 குருத்தோலை ஞாயிறு கிறிஸ்துவர்கள் ஊர்வலம்


ADDED : மார் 29, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் கிறிஸ்துவ மக்களின் குருத்தோலை ஊர்வலம் நடந்தது,

நடுப்பாண்டு பிப்.,12ம் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது. இதனை அடுத்து,மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நாள்தோறும், காலை மற்றும் மாலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, ஜெருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார். அப்போது ஜெருசலேம் நகரை சுற்றிலும் மக்கள் குருத்தோலை கையில் பிடித்தபடி, பாடல் பாடியபடி சென்றனர்.

இதனை வலியுறுத்தும் வகையில், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரித்து வருகின்றனர்.

இதன்படி, ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயம், சி.எஸ்.ஐ., துாய கிறித்துவ ஆலய தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஆலயத்தில் இருந்து குருத்தோலை கவனி துவங்கியது. பஸ் நிலையம் வழியாக, புனித தாமஸ் ஆலயம் வரை பவானி சென்றது. ஏராளமான கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us