ADDED : ஏப் 01, 2026 10:11 PM

குன்னுார்: குன்னுார் சரவணமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா விமரிசையாக நடந்தது.
குன்னுார் சரவணமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. குன்னுார் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடங்கள் மற்றும் காவடிகளை ஏந்தி, 5 கி.மீ., துாரம் ஊர்வலமாக வந்தனர். பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* வெலிங்டன் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கணபதி, சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு மூல மந்திர ஹோமங்கள், அபிஷேகம், அலங்காரம் கணபதி பூஜை, திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை , ஊஞ்சல் உற்சவம் இடம்பெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெலிங்டன் பகுதி பக்தர்கள் செய்திருந்தனர்.
* ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில், அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து, ஊட்டி பாறை முனீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் எல்க்ஹில் கோவிலுக்கு பால்குடம் எடுத்து சென்றனர். அதன்பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
