தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குன்னுார் கம்பி சோலை பகுதி சிறுத்தை நடமாடுவதால் அச்சம்

குன்னுார் கம்பி சோலை பகுதி சிறுத்தை நடமாடுவதால் அச்சம்

குன்னுார் கம்பி சோலை பகுதி சிறுத்தை நடமாடுவதால் அச்சம்


ADDED : நவ 17, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 05:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் கம்பிசோலை சி.ஏ.,கேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கம்பிசோலை பகுதியில் சிறுத்தை மற்றும் புலியின் நடமாட்டம் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (நவ.,16) இரவு, கம்பிசோலை அருகே வெடிமருந்து தொழிற்சாலையின் சி.ஏ.,கேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்த சி.சி.டி.வி., காட்சி வெளியாகி உள்ளது.

மக்கள் கூறுகையில்,‘ இப்பகுதியில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதயில் செல்லும் பணியாளர்கள் புலியை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us