/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் இறந்த 'பண்ணாரி' குட்டி யானை; வனத்துறையினர் அஞ்சலி
/
முதுமலையில் இறந்த 'பண்ணாரி' குட்டி யானை; வனத்துறையினர் அஞ்சலி
முதுமலையில் இறந்த 'பண்ணாரி' குட்டி யானை; வனத்துறையினர் அஞ்சலி
முதுமலையில் இறந்த 'பண்ணாரி' குட்டி யானை; வனத்துறையினர் அஞ்சலி
ADDED : அக் 17, 2024 10:13 PM

கூடலுார் : பண்ணாரி வனப்பகுதியில் தாயை பிரிந்து மீட்கப்பட்டு, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், பராமரித்து வந்த பெண் குட்டி யானை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், கடந்த மார்ச், 3ம் தேதி பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அதன் அருகே, 5 வயதுடைய ஆண் மற்றும் பிறந்து சில மாதங்களான பெண் யானை குட்டிகள் இருந்தன. ஆண் யானை கூட்டத்தோடு சேர்க்கப்பட்டது.
தாய் யானைக்கு கால்நடை டாக்டர் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி தாய் யானை, 5ம் தேதி உயிரிழந்தது. இதனால், குட்டி யானை வேறு கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். முயற்சி பலன் அளிக்கவில்லை.
தொடர்ந்து, குட்டி யானையை பராமரித்து வளர்க்க மார்ச், 9ம் தேதி, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டது. குட்டி யானையை அங்குள்ள கராலில் வைத்து, பாகன், உதவியாளர், 24 மணி நேரமும் அதனுடன் தங்கி பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், ஒன்றரை மாததுக்கு முன் குட்டி யானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. அதன் உடலுக்கு, முதுமலை துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர் மேகலா வன ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.