/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின குழந்தைகளின் அறிவு திறனை பரிசோதிக்க பரமபதம்
/
பழங்குடியின குழந்தைகளின் அறிவு திறனை பரிசோதிக்க பரமபதம்
பழங்குடியின குழந்தைகளின் அறிவு திறனை பரிசோதிக்க பரமபதம்
பழங்குடியின குழந்தைகளின் அறிவு திறனை பரிசோதிக்க பரமபதம்
ADDED : அக் 08, 2024 11:18 PM

பந்தலுார் : பழங்குடியின குழந்தைகள் மற்றும் பெற்றோர் இடையே, அறிவு திறனை மேம்படுத்தும் பரமபதம் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் 'சைல்ட் பண்ட்' திட்டத்தின் மூலம், பழங்குடியின குழந்தைகள் மற்றும் பெற்றோரின், சுய அறிவுத்திறனை பரிசோதிக்கும் வகையில், 'பரமபதம்' போட்டி நடத்தப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா தலைமை வகித்து பேசுகையில், ''கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், பழங்குடியின மக்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக, 'சைல்ட் பண்ட்' திட்டத்தின் கீழ், கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், 'கல்வி இடைநிற்றலை தவிர்த்தல், சுய ஒழுக்கம், உதவி செய்தல், கீழ்படிதல், தன்னம்பிக்கை, சுயநலம், ஏமாற்றுதல் மற்றும் பொறாமை எண்ணம்,போதைப்பழக்கம் ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
தொடர்ந்து, போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழங்குடியின பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கள பணியாளர் நீலகண்டன் நன்றி கூறினார்.

