/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறந்த மகனுக்காக பெற்றோர் வெளியிட்ட கவிதை நுால்
/
இறந்த மகனுக்காக பெற்றோர் வெளியிட்ட கவிதை நுால்
ADDED : ஜூன் 26, 2025 09:17 PM

ஊட்டி; ஊட்டி, நுாலக வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நுாலகத்தில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
நுாலகர் ரவி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் அமுதவல்லி தலைமை வகித்து பேசுகையில்,''தாவணே அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற, எனது மாணவனான அருண் பாரதி, 119 கவிதைகளை நோட்டில் எழுதியுள்ளார். கடந்த ஓராண்டிற்கு முன்பு உடல் நிலை பாதித்து, 32 வது வயதில் இறந்த நிலையில், அந்த நோட்டை கண்டெடுத்த பெற்றோர் மகனின் கவிதைகளை படித்து, கண் கலங்கினர்.
'தாய், தந்தை முதல் அன்பு, காதல் காலம்,' என, பல கவிதைகள் அதில் இடம்பெற்று இருந்தன. மகனுக்காக பெற்றோரால் 'இனிய இதய ஒலி இது' என்ற இந்த நுால் வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.
தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நுால் வெளியிட காரணமான ஆசிரியர் அழுதவல்லிக்கு பாராட்டு தெரிவித்தார்.
மறைந்த நூலாசிரியர் அருண் பாரதியின் பெற்றோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கவிஞர்கள் குணசீலன், ஜேபி, சமன்குமார், குழந்தைகள் நலத்துறையை சேர்ந்த கீதா, சிவரஞ்சனி, ஜெமிலா, பிரதீப் உட்பட பலர் பேசினர்.