/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி ஆண்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து வந்த பெற்றோர்
/
பள்ளி ஆண்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து வந்த பெற்றோர்
பள்ளி ஆண்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து வந்த பெற்றோர்
பள்ளி ஆண்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து வந்த பெற்றோர்
ADDED : பிப் 07, 2026 06:21 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே, உப்பட்டி அரசு பள்ளியின், 60-வது ஆண்டு விழாவிற்கு பெற்றோர் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பந்தலுார் அருகே, உப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின், 60வது ஆண்டு விழா, கல்வி சீர் விழா, விளையாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மைமூனா கொடியேற்றினார்.
தொடர்ந்து, உப்பட்டி பஜாரில் இருந்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திராதேவி தலைமையில், மேளதாளத்துடன், கல்வி சீர் வரிசை பொருட்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் துாரம் பெற்றோர் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் மேரி சாந்தி இமெல்டா வரவேற்றார்.
பள்ளி வளாகத்தில் தற்காப்பு கலை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில், மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் இளங்கோவன் தலைமையில், நடந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் லதா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் வனிதா பேசுகையில், ''கடந்த காலங் களில் மாணவர்கள் ஆசிரியர் கள் இடையே ஒரு இடைவெளி இருந்தது. ஆசிரியர்களை பார்த்தால் மாணவர்கள் பயந்து நடுங்கும் காலம் மாறி, தற்போது ஆசிரியர்களுடன், மாணவர்கள் நண்பர்களாக பழகும் நிலை உருவாகி உள்ளது.
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, அரசு பல்வேறு புதிய யுக்திகளை கொண்டு வந்து, கல்வியடன், பொது அறிவு திறனையும் மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பெற்றோர் அரசு பள்ளிகளில் தங்கள் மாணவர்களை சேர்ப்பதுடன், அடிக்கடி பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சந்தித்து, தங்கள் குழந்தைகளின் கல்வித்தரம் மற்றும் ஒழுக்கம் வைத்து கேட்டு தெரிந்து கொள்ள முன் வரவேண்டும்,'' என்றார்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு இசை கச்சேரி நடத்தப்பட்டது. ஆசிரியர் அனுசாந்தி நன்றி கூறினார்.

