/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்கா கண்ணாடி மாளிகை சீரமைப்பு பணிகள் தீவிரம்
/
பூங்கா கண்ணாடி மாளிகை சீரமைப்பு பணிகள் தீவிரம்
ADDED : நவ 11, 2024 06:42 AM

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சேதம் அடைந்த கண்ணாடி மாளிகையில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், பெரணி வகைகள், கள்ளிவகைகள் மற்றும் பசுமை குடில் தாவர வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கண்ணாடி மாளிகையில் வளர்க்கப்படும் தாவர வகைகளை, கண்டுக்களித்து செல்கின்றனர்.
இந்த தாவர வகைகள், கல்லுாரிகளில் தாவரவியல் பாடம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், பூங்கா நிர்வாகம், இவ்வகை தாவரங்களை அதிக சிரத்தையுடன் வளர்த்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கண்ணாடி மாளிகையின் மேற்கூரை, உடைந்து சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால், இங்கு வளர்க்கப்பட்ட தாவரங்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், பூங்கா நிர்வாகம், கண்ணாடி மாளிகையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால், அரிய தாவர வகைகள் பாதுகாக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.