/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' செய்ய தடை; வாகன உரிமையாளர்கள் அவதி
/
பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' செய்ய தடை; வாகன உரிமையாளர்கள் அவதி
பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' செய்ய தடை; வாகன உரிமையாளர்கள் அவதி
பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' செய்ய தடை; வாகன உரிமையாளர்கள் அவதி
ADDED : ஏப் 29, 2025 09:05 PM

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையத்தில், தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய முடியாதவாறு, தடுப்பு அமைத்து தடை விதித்துள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கோத்தகிரி பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு நகராட்சிக்கான கட்டமைப்பு வசதி, மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, தனியார் வாகனங்களை 'பார்க்கிங்' செய்வதில் தொடர் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், பஸ் நிலையம் எதிர்புறத்தில் உள்ள ஊட்டி பஸ் நிறுத்தத்தில், 20 வாகனங்களுக்கு மேல் பார்க்கிங் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் சிறிய குழி ஏற்பட்டதால் தற்காலிகமாக, பார்க்கிங் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, குழி மூடப்பட்டு, 'கான்கிரீட்' போடப்பட்டுள்ள நிலையில், தற்போதும், வாகனங்கள் நிறுத்த முடியாத அளவுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
தனியார் வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு, அவசர தேவைக்காக, சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதால், தனியார் வாகனத்தில் வந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.
கோடை சீசன் துவங்கி, அடுத்து வாரம் விழா தொடங்குவதால் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், இச்சாலையில் சென்று வருவதால், இடையூறை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கோத்தகிரி பஸ் நிலையத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள இடத்தில், வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்குவது அவசியம்.

