/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறந்தவெளி குப்பை கொட்டும் இடங்களில் பூங்கா: நகராட்சி புதிய முயற்சி கூடலுார் நகராட்சி புதிய முயற்சி

ADDED : டிச 25, 2024 07:53 PM

கூடலுார்; கூடலுார் நகரில், திறந்தவெளி குப்பை கொட்டும் இடங்களில், சிறு பூங்காக்கள் அமைத்து குப்பை கொட்டுவதை தடுக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கூடலுார் நகராட்சி பகுதியில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதித்துள்ளனர். வீடு மற்றும் கடைகளில் அகற்றப்படும் குப்பைகளை, நகராட்சி வாகனங்களில் நேரடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக துாய்மை பணியாளர்கள் நகராட்சி வாகனங்களில், அவர்கள் இருப்பிடம் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடலுார் நகரப்பகுதியில், சில இடங்களில் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்க, அப்பகுதிகளில், 'குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்' என, நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
எனினும், சிலர் திறந்த வெளிகளில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், குப்பை கொட்டும், திறந்த வெளி பகுதிகளில் நகராட்சி சார்பில், அப்பகுதி கடைக்காரர்கள் உதவியுடன் சிறு பூங்கா அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி புதுப்பொலிவு பெற்று இருப்பதுடன், குப்பை கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில்,'நகராட்சியின், இம்முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோன்று, நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உலாவரும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.